ராஜஸ்தான்: சாலையில் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி

விபத்தில் இளைஞர் படுகாயமடைந்தார்
ராஜஸ்தான்: சாலையில் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜுனு மாவட்த்தை சேர்ந்த 4 இளைஞர்கள் சோனாசர் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு 4 இளைஞர்களும் ஒரேகாரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.,

மண்ட்ரிலா பகுதியில் சென்றபோது சாலையில் காரின் குறுக்கே நாய் வந்துள்ளது. நாய் மீது மோதுவதை தவிர்க்க கார் டிரைவர் முயற்சித்துள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த விஜய், கவுரவ், சுனில் ஆகிய 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஜிஜேந்திரா என்ற இளைஞர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com