

ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவின் பண்டலப் பகுதியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது இந்த பாலம் சேதமடைந்தது. இதையடுத்து சேதமடைந்த பாலத்தை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பாலத்தை மறுசீரமைக்கும் பணியில் நேற்று 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 ஊழியர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.