பாட்னா: ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு

பாட்னாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பாட்னா: ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னா சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி ஓட்டலில் இன்று காலை 11 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். உயிரிழந்த 6 பேரில் 3 பெண்களும் அடங்குவர். உயிரிந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் யார் என்பது குறித்த அடையாளம் காணப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com