கர்நாடகாவில் இஸ்ரேலிய பெண் சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனை

ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கர்நாடகாவில் இஸ்ரேலிய பெண் சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனை
Published on

பெங்களூரு,

இஸ்ரேலை சேர்ந்த 27 வயதான இளம்பெண் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கர்நாடகாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் கர்நாடகாவின் விஜயவாடா மாவட்டம் ஹம்பி பகுதியில் உள்ள 29 வயதான இளம்பெண்ணின் வீட்டில் ஹோம்ஸ்டே (Homestay) முறையில் தங்கி இருந்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி மாலை இஸ்ரேலிய சுற்றுலா, பயணி தான் தங்கி இருந்த ஹோம்ஸ்டே வீட்டின் உரிமையாளர் மற்றும் அமெரிக்கா, ஒடிசா, மராட்டியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 ஆண் சுற்றுலா பயணிகள் என மொத்தம் 5 பேரும் ஹம்பி அருகே உள்ள துங்காத்ரா கால்வாய் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பைக்கில் வந்த மலேஷ், சாய், சரணப்பா ஆகிய 3 பேர் கால்வாய் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 5 பேரிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், சுற்றுலா பயணிகள் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த 3 பேரும் ஆண் சுற்றுலா பயணிகள் 3 பேரையும் கால்வாய்க்குள் தள்ளிவிட்டனர்.

பின்னர், இஸ்ரேலிய பெண் சுற்றுலா பயணியையும், ஹோம்ஸ்டே வீட்டின் உரிமையாளரான இளம்பெண்ணையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கால்வாய்க்குள் தள்ளிவிடப்பட்ட ஆண் சுற்றுலா பயணிகளில் ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். எஞ்சிய 2 ஆண் சுற்றுலா பயணிகள் கால்வாயில் நீந்தி கரைசேர்ந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஆண் சுற்றுலா பயணியை கால்வாய்க்குள் தள்ளி கொலை செய்துவிட்டு இஸ்ரேலிய பெண் சுற்றுலா பயணி உள்பட 2 பெண்களை கூட்டு பாலியல் வன்கொஉமை செய்து தலைமறைவான மலேஷ், சாய், சரணப்பா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் மீதான வழக்கு கொப்பள் மாவட்டம் கங்காவதி நகர முதன்மை கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இஸ்ரேலிய சுற்றுலா பயணி உள்பட 2 பேரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது, கால்வாயில் தள்ளி ஆண் சுற்றுலா பயணியை கொலை செய்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் மலேஷ், சாய், சரணப்பா ஆகிய 3 குற்றவாளிகள் மீதும் நிரூபணம் ஆனது. இதையடுத்து குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குதண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com