மத்தியபிரதேசம்: மின்னல் தாக்கி சிறுவன் உள்பட 3 பேர் பலி

மத்தியபிரதேச மாநிலத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது.
மத்தியபிரதேசம்: மின்னல் தாக்கி சிறுவன் உள்பட 3 பேர் பலி
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ஷாதொல் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் அவ்வப்போது மின்னல் தாக்கின.

3 பேர் பலி

இந்நிலையில், ஷாதொல் மாவட்டத்தில் மின்னல் தாக்கி சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாவட்டத்தின் சுகி டொலா கிராமத்தை சேர்ந்த 45 வயது நபர் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

அதேபோல், ஜிங் கிராமத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார். மேலும், முஸ்ரா கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com