பீகாரில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் பலி

பீகாரில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
பீகாரில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் பலி
Published on

பாட்னா,

பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள சாபில்பூர் காவல் நிலைய பகுதியில் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ மீது வேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ராஜ்கிர் துணைப்பிரிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் காஞ்சன் தேவி, திலீப் குமார் மற்றும் பிந்தி பிரசாத் என்றும் காயமடைந்தவர்கள் பிரியங்கா தேவி, ரிங்கி தேவி மற்றும் ரவி ரஞ்சன் குமார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com