பஞ்சாப்பில் சோகம்: சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப்பில் சோகம்: சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி
Published on: 

சண்டிகர்,

பஞ்சாப்பில் சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் 30க்கும் மேற்பட்டோர் மணாலிக்கு சுற்றுலா சென்றனர். சுற்றுலா பயணத்தை நிறைவு செய்த மீண்டும் இன்று அதிகாலை மாணவ, மாணவியர் கல்லூரிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

3 பேர் பலி

பஞ்சாப்பின் பங்கா - பஹ்வாரா நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. மஜாரி என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com