டெம்போ மீது லாரி மோதி 3 பேர் பலி: திருப்பதி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது சோகம்

இந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
டெம்போ மீது லாரி மோதி 3 பேர் பலி: திருப்பதி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது சோகம்
Published on

அமராவதி,

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டம் பகேபள்ளி 15க்கும் மேற்பட்டோர் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய டெம்போ டிராவலர் வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று டெம்போவில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம் குருபலகொடா பகுதியில் டெம்போ டிராவலர் சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் டெம்போ டிராவலரில் பயணம் செய்த 3 பேர் சமப்வ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்9 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், டெம்போ மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com