

நிவாரி,
மத்திய பிரதேச மாநிலத்தின் நிவாரி நகரில் காட்வாஹா கிராமத்தில் மணற்குன்று திடீரென சரிந்து விழுந்ததில் 3 பேர் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் பற்றி நிவாரி போலீஸ் சூப்பிரெண்டு அலோக் குமார் கூறும்பொழுது, மணற்குன்று அவர்கள் மீது சரிந்ததில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
எனினும் சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயிரிழந்து விட்டனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்துள்ளோம். உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.