

பாட்னா,
பீகாரில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதல் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பர்சா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கினர். இந்த மோதலில் முகேஷ், ரவீஷ், அனுக் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும், விவேக் என்ற நபர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதலுக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.