கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்து: யாத்ரீகர்கள் 3 பேர் பலி

கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது சொகுசு கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்து: யாத்ரீகர்கள் 3 பேர் பலி
Published on

போபால்,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மத்திய பிரதேச மாநிலம் செஹேர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் சொகுசு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அந்த சொகுசு கார் மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் யாத்ரீகர்கள் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com