கர்நாடகத்தில் தினமும் 3 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்

கர்நாடகத்தில் தினமும் 3 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தினமும் 3 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்
Published on

பெங்களூரு,

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கர்நாடக மாநிலத்தின் தற்போதைய தடுப்பூசி நிலவரம் குறித்த தகவலை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் வருகிற 5 அல்லது 6-ந் தேதி டெல்லி செல்வேன். அப்போது மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்தித்து கர்நாடகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன். கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. இன்னும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி போடும் பணியை நிறுத்தவில்லை.

தினமும் 3 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மத்திய அரசு தடுப்பூசி வழங்கியவுடன் அவை மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் 20 கிராமங்கள் கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 3 கிராமங்கள் மைசூரு மாவட்டத்தில் உள்ளன. மைசூருவுக்கு அதிக தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com