இரும்பு கம்பியால் பலமுறை சூடு வைத்ததில் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் சூடான கம்பியால் பலமுறை சூடு வைத்ததில் 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சாதோல்,

மத்தியப் பிரதேசம் மாநிலம் சாதோலில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தைக்கு சிகிச்சை என்ற பெயரில் 24 முறை சூடான இரும்பு கம்பியால் சூடு வைத்ததில் அந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக சாதோல் கலெக்டர் வந்தனா வைத்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இதுபோன்ற மூடநம்பிக்கைகள் சாதோலில் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இது போன்ற சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்று மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வோம். இவற்றை தடுக்க அதிக விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்துவதே ஒரே வழி" என்று கூறினார்.

மேலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, இந்த சம்பவம் குறித்து கவனத்தில் கொண்டதாகவும், கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com