மராட்டியத்தில் ரூ.25 லட்சம் போதைப்பொருளுடன் நைஜிரீயர்கள் 3 பேர் கைது

மராட்டியத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த நைஜிரீயர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மராட்டியத்தில் ரூ.25 லட்சம் போதைப்பொருளுடன் நைஜிரீயர்கள் 3 பேர் கைது
Published on

மும்பை,

தானே மாவட்டம் காஷிமிரா ஹட்கேஷ் பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக மிராபயந்தர்- வசாய்விரார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நைஜிரீயா நாட்டை சேர்ந்த 3 பேர் அங்கு தங்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டில் நடத்திய சோதனையில் 100 கிராம் எடையுள்ள கொகைன், மற்றும் 655 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். மேலும் போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com