கேரளாவில் 3 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி

நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் 3 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி
Published on

திருவனந்தபுரம்,

கேரளத்தில் ஷிகெல்லா, நிபா வைரஸ் பரவி வருவதால் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை மந்திரி கே.எம்.முரளிதரன் நிருபர்களிடம் கூறியதாவது,

நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினோம். அதில் 3 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 100 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com