கோவாவில் மரத்தின் மீது கார் மோதி விபத்து; 3 பேர் பலி

கோவாவில் அதிவேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
Credit : PTI
Credit : PTI
Published on

கோவா,

கோவாவில் உள்ள பனாஜியிலிருந்து மபுசா நோக்கி சென்றுகொண்டிருந்த கார், போர்விரின் பகுதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மரத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 1 பெண் மற்றும் 2 ஆண்கள் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கூடவே விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் கார் அதிவேகமாக வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com