3 மாநில சட்டசபை தேர்தல்; பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்


3 மாநில சட்டசபை தேர்தல்; பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 25 Sept 2025 3:42 PM IST (Updated: 25 Sept 2025 4:46 PM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநில சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதானை நியமனம் செய்தார் ஜே.பி.நட்டா.

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், மேற்கு வங்காளம், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். இந்தநிலையில்,

தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் வைஜெயந்த் பாண்டா தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய இணை மந்திரி முரளிதர் மொகல் இணைப்பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை பொறுப்பாளர்களாக சி.ஆர்.பாட்டில் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மேற்கு வங்காளம் சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பாஜக தலைவர் பூபேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பிப்லாப் குமார் தேப் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story