

ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் சானபரா பகுதியில் கடந்த 26-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒரு காவலர் காயம் அடைந்தார். இதுகுறித்து சானபரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக லஷ்கர்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் நேற்று கைது செய்தனர்.