ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது
ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமா மாவட்டத்தின் அமைந்துள்ள ஸடூரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக நேற்று, 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com