மும்பை விமான நிலையத்தில் ரூ.8.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவுடன் 3 பெண்கள் கைது

3 பெண்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, 3 பெண்கள் தங்களது உடமைகளில் ரூ.8.6 கோடி மதிப்புள்ள உயர் தர ஹைட்ரோபோனிக் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பெண்களையும் கைதுசெய்தனர். அவர்கள் கூட்டாளிகள் யார்? என்பது குறித்து 3 பெண்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





