பீகார்: டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் பலி

விபத்தில் 6 பெண்கள் படுகாயமடைந்தனர்.
பீகார்: டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் பலி
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் சர்சய் கலன் கிராமத்தை சேர்ந்த 27 பெண் கூலித்தொழிலாளர்கள் இன்று விவசாய பணிக்காக டிராக்டரில் அழைத்து செல்லப்பட்டனர்.

விபத்து

சர்சய் ஹனுமன்கஞ்ச் பகுதியில் விவசாய நிலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பெண்கள் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com