3 வயது சிறுமி கொலை வழக்கு; பெற்றோர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தர பிரதேசத்தில் 3 வயது சிறுமி கொலை வழக்கில் பெற்றோர் உள்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
3 வயது சிறுமி கொலை வழக்கு; பெற்றோர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
Published on

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் நக்லா பஜர்க் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ஷமிம் மற்றும் அவரது மனைவி குஷ்னாசீப். இவர்களது 3 வயது மகள் லிபா.

இந்த நிலையில், கடந்த மே 2ந்தேதி சிறுமி லிபா கொல்லப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இந்த கொலையை பழைய பகையால் ஷமிமின் சகோதரர் செய்துள்ளார் என்று காவல் நிலையத்தில் ஷமிம் புகார் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் பெற்றோரே நண்பர் ஒருவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து ஷமிம், குஷ்னாசீப் மற்றும் ஷமிமின் நண்பர் அப்பாஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் 14 நாட்களுக்குள் குற்ற பத்திரிகை தயார் செய்தனர். நாள்தோறும் என்ற அடிப்படையில் இரண்டரை மாதங்களில் நீதிமன்ற விசாரணை நடந்து முடிந்துள்ளது. இந்த வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி அஜய் குமார், 3 வயது சிறுமி கொலை வழக்கில் பெற்றோர் உள்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கிறது.

குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா .1 லட்சத்து 12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com