புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை; ரூ.10 லட்சம் அபராதம் - மசோதா தயார்

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கும் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை; ரூ.10 லட்சம் அபராதம் - மசோதா தயார்
Published on

புதுடெல்லி,

புத்தம் புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதால், பட அதிபர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதை தடுக்க திரைப்பட சட்டம்-1952-ன் 7-வது பிரிவு, அபராதம் விதிக்க வகை செய்கிறது. இந்நிலையில், தண்டனையை கடுமையாக்குவதற்காக, இச்சட்டத்தில் புதிய உட்பிரிவை சேர்க்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திரைப்பட சட்ட திருத்த வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது.

இதன்படி, எழுத்துமூலமான அனுமதியின்றி திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். இந்த வரைவு மசோதா குறித்து 14-ந் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com