

திருவனந்தபுரம்,
கேரளத்தில் சொத்து பிரிவினைக்கு பின் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்படும் என்று முதல்-மந்திரி வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் காந்தி பவனில் நடைபெற்ற ஆதரவற்ற முதியோர் இல்ல திறப்பு விழாவில் கலந்துகொண்டு முதல்-மந்திரி வி.டி.சதீசன் பேசியதாவது:
'கேரளத்தில், சொத்து பிரிவினைக்கு பின் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்படும். ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மூத்த குடிமக்கள் நலனுக்காக தனி துறையை அமலுக்கு கொண்டு வந்த ஐக்கிய முன்னணி அரசு ஆதரவற்ற பெற்றோருக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.