புதுச்சேரியில் 3 வாலிபர்கள் வெட்டிப் படுகொலை


புதுச்சேரியில் 3 வாலிபர்கள் வெட்டிப் படுகொலை
x
தினத்தந்தி 14 Feb 2025 1:45 PM IST (Updated: 14 Feb 2025 1:48 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 3 வாலிபர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகரில் 3 வாலிபர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்றவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெட்டி கொல்லப்பட்டவர்கள் ரிஷி, பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் என்பதும், மற்றொருவர் திடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டவர் ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி, அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலை நடந்த இடத்தில் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த கோர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் 3 வாலிபர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ரெயின்போ நகர் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

1 More update

Next Story