ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீது 30-ந்தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீது 30-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டு மனு தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது அவர், ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறாமல் உள்ளது. எனவே, நவம்பர் 30-ந்தேதி நடைபெறும் விசாரணை தேதியை எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என முறையிட்டார்.

அதை ஏற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திட்டமிட்டபடி வருகிற 30-ந்தேதி எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com