நவம்பர் 8 முதல் இந்தியாவில் இருந்து 30 லட்சம் பேர் அமெரிக்கா செல்ல வாய்ப்பு - தூதரகம் தகவல்

அமெரிக்க அரசு அளித்துள்ள தளர்வு காரணமாக நவம்பர் 8 முதல் இந்தியாவில் இருந்து 30 லட்சம் பேர் அமெரிக்கா செல்ல முடியும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 8 முதல் இந்தியாவில் இருந்து 30 லட்சம் பேர் அமெரிக்கா செல்ல வாய்ப்பு - தூதரகம் தகவல்
Published on

புதுடெல்லி,

அமெரிக்கா தற்போதுவரை தங்கள் நாட்டு குடிமக்கள் மற்றும் சிறப்பு விசா வைத்திருக்கும் வெளிநாட்டினரை மட்டுமே தங்கள் நாட்டுக்குள் அனுமதித்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை வருகிற 8-ந்தேதி முதல் நீக்குகிறது. அதன்படி இந்தியா உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள், அமெரிக்காவுக்கு வர அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வு காரணமாக வருகிற 8-ந்தேதியில் இருந்து சுமார் 30 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல முடியும் என டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது. இதற்காக முழுமையாக தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்கள் தேவை என்றும் கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம் குடியேற்றம் அல்லாத விசா வைத்திருப்போர் அமெரிக்கா செல்வது இன்னும் தாமதம் ஆகும் என தெரிகிறது. ஏனெனில் கொரோனா பிரச்சினைககளில் இருந்து தற்போதுதான் படிப்படியாக மீண்டு வருவதால், இந்த விசா பரிசீலனைக்கு மேலும் தாமதம் ஆகும் எனவும் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருப்பதன் மூலம், அந்த தடுப்பூசி போட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியும் எனவும் தூதரகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com