தெலுங்கானாவில் 30 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்

மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை அதிரடிபடையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தெலுங்கானாவில் 30 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை அதிரடிபடையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சுமார் 30 மாவோயிஸ்டுகள் நேற்று தெலுங்கானா போலீசாரிடம் சரணடைந்தனர்.

சரணடைந்தவர்களில், மக்கள் விடுதலை கொரில்லா படைத்தள பதிசோடி கேஷாலு என்பவர் முக்கியமானவர் என தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளில் தெலுங்கானா மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் இருந்து மொத்தம் 721 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com