

கவுகாத்தி,
அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் செராகி பகுதியில் தொங்கு பாலம் ஒன்று உள்ளது. சிங்லா ஆற்றின் மீது கட்டப்பட்டு உள்ள இந்த பாலம், செராகி பகுதி மற்றும் கிராமம் ஆகியவற்றை இணைக்கிறது.
இந்த பாலத்தின் வழியே பல ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் பல பகுதிகளுக்கும் மற்றும் தங்களுடைய பள்ளிகளுக்கும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், செராகி பகுதியில் அமைந்த பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவர்கள் பாலம் மீது செல்லும்போது அது இடிந்து விழுந்துள்ளது. இதில், மாணவர்கள் 30 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். காயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.