300 சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆன்லைன் விளையாட்டு சட்டத்தை கொண்டு வந்தது.
300 சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி
Published on

புதுடெல்லி,

ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் மூலம் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பின்னர், கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆன்லைன் விளையாட்டு சட்டத்தை கொண்டு வந்தது.

இந்த சட்டம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், திறமை விளையாட்டு கள் அல்லது இவற்றின் கலவையாக இருந்தாலும் சரி, அனைத்து வகை யான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் முழுமையாக தடை செய்கிறது. மேலும், இதுபோன்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரம் செய்வது, வங்கிகள் அல்லது பணம் செலுத்தும் முறைகள் மூலம் அதுதொடர்பான நிதி பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதையும் தடை செய்கிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-ன் விதிகளின் கீழ் சட்டவிரோத தளங் களுக்கான அணுகலை தடுக்க இந்த சட்டம் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த சட்டங்களின் கீழ் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை அனுமதிப்பது, நிதி பரிவர்த்தனைக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றவற் றுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனைக்கு உள்ளாக்கப்பட லாம்.

மேலும், அடுத்தடுத்து குற்றத்தில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை 5 ஆண் டுகள் வரை நீட்டிக்கப்படலாம். அதுமட்டுமல்லாமல் குறைந்தபட்சம் ரூ.1 கோடி அபராதம் என்பது ரூ.2 கோடி வரை நீட்டிக்கப்படலாம். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரப்படுத்துவதை பொறுத்த மட்டில் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும்.

இந்த சட்டத்தின் மூலம் சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள், செயலிகளை ஒடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அந்தவகையில் தற்போது 300 சூதாட்ட இணையதளங்கள், செயலிகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபடும் பயனர்கள், அதிலும் குறிப்பாக இளையோர் தங்கள் பணத்தை இழப்பதை தடுப்பதில் அரசு தீவிரமாக இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டு சட்டம் அமலான பிறகு இதுவரை 8,400-க்கும் மேற்பட்ட சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com