சிக்கமகளூரு டவுனில் மூன்று கடைகளில் 300 கிலா மாட்டிறைச்சி பறிமுதல்

சிக்கமகளூரு டவுனில் மூன்று கடைகளில் இருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 300 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்து நகரசபை கமிஷனர் பசவராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிக்கமகளூரு டவுனில் மூன்று கடைகளில் 300 கிலா மாட்டிறைச்சி பறிமுதல்
Published on

சிக்கமகளூரு: சிக்கமகளூரு டவுனில் மூன்று கடைகளில் இருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 300 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்து நகரசபை கமிஷனர் பசவராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பசுவதை தடை சட்டம்

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. இதையடுத்து இறைச்சிக்காக பசுமாடுகளை கடத்துவோர், சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனியில் சட்டவிரோதமாக 3 கடைகளில் மாட்டிறைச்சி விற்பதாக நகரசபை கமிஷனர் பசவராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நகரசபை கமிஷனர், அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

300 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

பின்னர் அங்கு சென்று பார்த்தபோது 3 கடைகளில் மாட்டிறைச்சிகளை வெட்டி வைத்து பாலிதீன் பைகளில் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. முன்னதாக நகரசபை அதிகாரிகள், போலீசார் வருவதை அறிந்து 3 மாட்டிறைச்சி கடைக்காரர்களும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.

இதையடுத்து 3 கடைகளில் இருந்து 300 கிலோ மாட்டிறைச்சி, கடையில் இருந்த அரிவாள், தராசு உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகரசபை கமிஷனர் பசவராஜ் அளித்த புகாரின் பேரில் சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 மாட்டிறைச்சி கடைக்காரர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com