24 மணி நேரத்தில் 30 கோடி பார்வைகள்... உலக சாதனை படைத்த பிரதமர் மோடியின் ‘ரீல்ஸ்’

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 23-ந்தேதி நள்ளிரவு வெளியிட்ட ரீல்ஸ் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றது.


24 மணி நேரத்தில் 30 கோடி பார்வைகள்... உலக சாதனை படைத்த பிரதமர் மோடியின் ‘ரீல்ஸ்’
Published on

புதுடெல்லி,

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் புதிய மசோதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 23-ந்தேதி நள்ளிரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றது.

ஒரே இரவில் 10.4 கோடி பார்வைகள்

வெளியான முதல் இரவிலேயே இந்த வீடியோ 10.4 கோடி பார்வைகளை கடந்தது. தொடர்ந்து 24 மணி நேரத்துக்குள் 30 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று புதிய உலக சாதனையை படைத்தது. தற்போது அந்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை 32 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 1 கோடியே 90 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவை 'லைக்' செய்துள்ளனர்.

தனது பதிவுக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் பயனர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

ஐஷோஸ்பீட் சாதனையை முறியடித்ததாக தகவல்

இதற்கு முன்பு, பிரபல யூடியூபர் ஐஷோஸ்பீட் உலகக்கோப்பை தொடரின்போது பிடிஎஸ் குழுவினரை சந்தித்த வீடியோ, 24 மணி நேரத்தில் 30 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்ததாக கூறப்பட்டது. தற்போது பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அந்த சாதனையை முறியடித்து, ஒரே நாளில் அதிக பார்வைகளைப் பெற்ற வீடியோவாக புதிய சாதனையைப் படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற ரீல்ஸ் இதோ:-

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com