உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா? - இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம்

உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா என்பது குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா? - இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் 3,350 டன் தங்கம் நிலத்தடியில் உள்ளதாக வெளியான செய்தி குறித்து இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

இந்த செய்தி வெளியானதற்கும் புவியியல் ஆய்வு மையத்துக் கும் எந்த தொடர்பும் இல்லை, சோன்பத்ரா மாவட்டத்தில் இது போல் பெரிய அளவு தங்கம் இருப்பதாக புவியியல் ஆய்வு மதிப் பிடவும் இல்லை. நாங்கள் தங்கம் இருப்பு குறித்து பல ஆய்வுகள் நடத்தியுள்ளோம். ஆனாலும் அதன் முடிவுகள் சோன்பத்ராவில் இந்த அளவு தங்கம் இருப்பதை உறுதி செய்யவில்லை. 1998-99 மற்றும் 1999-2000 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் புவியியல் ஆய்வு இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சோன்பத்ரா மாவட்டத்தில் சாத்தியமான தாது 52,806.25 டன் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு டன் தாதுப் பொருளில் சராசரியாக 3.03 கிராம் தங்கம் கிடைக்கும். அதன்படி அங்கு இருக்கும் தாதுப்பொருளில் சுமார் 160 கிலோ தங்கம்தான் கிடைக்கும், ஊடகங்களில் வெளியானதுபோல 3,350 டன் அல்ல என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com