

புதுடெல்லி
இந்தியாவில் 24 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் போது தான் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்படுவதாகவும், பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான விகிதம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியதாவது:-
ஜப்பானில் 11.7 பேருக்கு சோதனை நடத்தப்படும் போது ஒருவருக்கு தொற்று உறுதியாகிறது. அமெரிக்காவில் 5.3 பேருக்கும் இங்கிலாந்தில் 3.4 பேருக்கும், இத்தாலியில் 6.7 பேருக்கும் சோதனை நடத்தும் போது ஒரு தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது .
இன்று வரை 2,90,401 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது, இதில் 30,043 (ஐ.சி.எம்.ஆரின் 176 ஆய்வகங்களில் 26,331 சோதனைகள் மற்றும் 78 தனியார் ஆய்வகங்களில் 3,712 சோதனைகள்) நேற்று பரிசோதிக்கப்பட்டன.
இந்தியாவில் மீட்பு விகிதம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 260 மீட்கப்பட்டுள்ளன, இது இதுவரை இந்தியாவில் மிக உயர்ந்ததாகும் .அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தொற்று அனைவருக்கும் எளிதாக பரவ வாய்ப்பில்லை என்பதால் தொற்று சோதனை மெதுவாகவே நடத்தப்படுவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஹாட்ஸ்பாட்டுகள் மற்றும் தொற்று இல்லாத கிரீன் மண்டலங்களில் ரேபிட் டெஸ்ட் நடத்தப்படுவதாக கூறி உள்ளது.
இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் இல்லை என்று ஒரு நாள் முன்னதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருந்தது.