2 ஆண்டுகளில் 307 சிங்கங்கள் சாவு: எங்கே? எப்படி?


2 ஆண்டுகளில் 307 சிங்கங்கள் சாவு: எங்கே? எப்படி?
x

கோப்புப்படம் 

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 307 சிங்கங்கள் இறந்துள்ளன.

ஆமதாபாத்,

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 307 சிங்கங்கள் இறந்துள்ளன. இவற்றில் 41 சிங்கங்கள் சாலை விபத்துகளில் சிக்கியும் திறந்த வெளி கிணற்றில் விழுந்தும் மின்சாரம் பாய்ந்தும் இறந்துள்ளன. மேலும், இதனை தடுப்பதற்காக மாநில அரசு ரூ.37 கோடி ஒதுக்கியுள்ளது. அந்த வகையில் விலங்குகளுக்கு தேவையான சிகிச்சை உடனடியாக அளிக்கப்படுதல்.

கிர் வனவிலங்கு சரணாலயம் அருகில் உள்ள சாலையில் வேக கட்டுபாடுகளை அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. குஜராத்தின் கிர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் 891 ஆசிய சிங்கங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story