திரிபுராவில் 31 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்

திரிபுரா மாநிலத்தில் சதர் உதவி மண்டலத்திற்கு உட்பட்ட அருந்ததி நகரில் ஊராட்சி சார்பில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் ஒன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
திரிபுராவில் 31 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்
Published on

இங்கு சிகிச்சை பெற்ற 31 கோவிட் நோயாளிகள் நேற்று தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். நோயாளிகள் அனைவரும், இந்திய ஆயுதப்படைக்கான உடல்தேர்வுக்கு வந்த இளைஞர்களாவர். அவர்களில் கொரோனா தொற்று இருந்தவர்களை தற்காலிக முகாமில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com