ஒடிசாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று

ஒடிசாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று
Published on

புவனேஷ்வர்,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சமீப காலங்களாக தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒடிசாவில் 10 மற்றும் 12--ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிசா மாநிலத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் பள்ளிகள் திறக்கப்பட்டும், பள்ளிகள் திறந்த இரண்டே நாட்களில் 31 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com