'சி-விஜில்' செயலியில் 3,147 புகார்கள் பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ‘சி-விஜில்’ செயலியில் 3,147 புகார்கள் பதிவாகியுள்ளது.
'சி-விஜில்' செயலியில் 3,147 புகார்கள் பதிவு
Published on

கர்நாடகத்தில் தற்போது சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பரிசுப்பொருட்கள் வழங்குவது, நடத்தை விதிகள் மீறப்படுவது தொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் அளிப்பதற்கு தேர்தல் ஆணையம் வசதி செய்துள்ளது. இதற்காக 'சி-விஜில்' என்னும் செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலி மூலம் யார் வேண்டுமானாலும், உரிய ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் கூறி இருந்தனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

'சி-விஜில்' செயலி அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை சுமார் 3,147 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. தேர்தல் விதிகளை மீறியவர்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்கள் ஏற்று கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவற்றை பரிசோதனை செய்ததில் 2,643 புகார்கள் உண்மையானவை என்பதும், மற்றவை நேரத்தை வீணடிக்க வழங்கப்பட்ட பொய் புகார்கள் என்பதும் தெரிந்தது. இவற்றில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், பேனர்கள், பரிசுபொருட்கள் வழங்கியவை தான் அதிகம். இதேபோல் பறக்கும் படையில் அதிகாரிகள் தனியே 1,334 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com