

குருகிராம்,
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் மோனு (வயது 22) என்பவர் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்து வந்தார். மோனு 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கணினி தொடர்பான டிப்ளமோ படிப்பின் ஒரு பகுதியாக காவல் நிலையத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார்.
அவருக்கு கணினி பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவி பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த பணியின் மூலம், ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டிருந்த ஆயுத கிடங்கு அறைக்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காவ்ல் நிலையத்தில் இருந்த 33 துப்பாக்கிகளை திருடியுள்ளார். கடந்த மாதம் காவல் நிலைய அதிகாரிகள், ஆயுதக் கிடங்கை ஆய்வு செய்தபோதுதான் துப்பாக்கிகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவினர் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், மோனு துப்பாக்கிகளை திருடியது. திருடிய துப்பாக்கிகளை அரியானா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளவர்களிடம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, திருடப்பட்ட 32 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. காவ்ல் நிலையத்திலேயே துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.