

பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இந்திராநகர் பகுதியில் 80 அடி சாலையில் நிறைய பப்கள், இரவு விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளன. இங்குள்ள பப் ஒன்றில் பெண்கள் அநாகரீக முறையில் உடை அணியும்படி செய்யப்பட்டு உள்ளனர். ஆபாச செயல்களில் ஈடுபடும்படியும் வற்புறுத்தப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி பப்பின் நிர்வாகத்திற்கு எதிராக போலீசார் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். இதில் 32 பெண்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு உள்ளனர். 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.