

ஸ்ரீநகர்
இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ள இந்த எல்லைதாண்டிய வர்த்தகத்திற்கான காப்பாளர் சாகர் டி தோய்ஃபோடே , இந்த 34 நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இரு நாட்டு அதிகாரிகளும் சட்ட விரோத வர்த்தகத்தை தடுப்பதற்காக ஒருசேர முடிவெடுத்துள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
இருவாரங்களுக்கு முன்னர் காவல்துறையினர் 66.5 கிலோ கிராம் ஹெராயின் மற்று பிரவு சுகர் போதைப்பொருட்களை ஒரு டிரக் வண்டியிலிருந்து கைப்பற்றினர். அந்த வண்டி பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலிருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.