மக்களவை தேர்தல்: பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய பாதுகாப்பு படைகள்

மக்களவை தேர்தலில் 3.40 லட்சம் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

2024 மக்களவை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கவுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநில போலீஸ் படையுடன் 3.40 லட்சம் மத்திய ஆயுத படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசியல் ரீதியாக கொந்தளிப்பான மேற்கு வங்காள மாநிலத்தில் அதிகபட்சமாக 92,000 மத்திய ஆயுத படை வீரர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும், அதைத் தொடர்ந்து பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் 63,500 மத்திய ஆயுத படை வீரர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, குஜராத், மணிப்பூர் மற்றும் ராஜஸ்தானில் தலா 200 மத்திய ஆயுத படை கம்பெனிகள் நிறுத்தப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com