இமாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு
Published on

சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவு 10.02 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் கின்னூரில் உள்ள நாகோ அருகே சாங்கோ நிச்லாவில் இருந்ததாக பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிலோமீட்டர் ஆகும். சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com