

புதுடெல்லி,
சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. பொருட்கள் மற்றும் சேவைகள் மீது குறைந்தபட்சமாக 5 சதவீதம் மற்றும் 12, 18, 28 சதவீதம் என நான்கு வகையாக வரி விதிக்கப்படுகிறது. சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்ட போது 226 பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதன்பிறகு அவ்வப்போது பல பொருட்கள் மீதான சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டது. நேற்றுமுன்தினமும் பல பொருட்களின் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டது.
இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 28 சதவீத வரி வரம்பில் இருந்து 191 பொருட்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது 35 பொருட்கள் மட்டுமே அந்த வரி வரம்புக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.