ஸ்கூட்டரில் கடத்திய ரூ.35 ஆயிரம் கஞ்சா பறிமுதல்

மைசூருவில் ஸ்கூட்டரில் கடத்திய ரூ.35 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை போலீசா பறிமுதல் செய்தனர்.
ஸ்கூட்டரில் கடத்திய ரூ.35 ஆயிரம் கஞ்சா பறிமுதல்
Published on

மைசூரு

மைசூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மேஜர் பார்க் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், ஸ்கூட்டரில் இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 167 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல், மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா தலக்காடு கிராமத்தில் மகாதேவ் என்பவர், தனது வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தார்.

இதனை அறிந்த போலீசார் அவரது வீட்டுக்கு சென்று 5 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். முன்னதாக போலீஸ் வருவதை அறிந்து மகாதேவ் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து டி.நரசிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com