ஆந்திர மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திர பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஐதராபாத்,

ஆந்திர பிரதேச மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,89,553 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இதுவரை 6,481 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 7,49,676 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 33,396 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com