ஜம்மு காஷ்மீரில் 3.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க்கில் 3.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குல்மார்க்,

ஜம்மு காஷ்மிலுள்ள குல்மார்க்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

மதியம் 12:45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குல்மார்க்கில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com