டெல்லி ஓட்டலில் இருந்து 39 நேபாள பெண்கள் மீட்பு வெளிநாடுகளுக்கு கடத்த திட்டம் ?

டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து 39 நேபாள பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக டெல்லி மகளிர் ஆணைம் கூறி உள்ளது.
டெல்லி ஓட்டலில் இருந்து 39 நேபாள பெண்கள் மீட்பு வெளிநாடுகளுக்கு கடத்த திட்டம் ?
Published on

புதுடெல்லி

சமீபத்தில் வளைகுடா நாடுகளுக்கு சட்டவிரோதமாக நேபாளத்திலிருந்து ஏழைப் பெண்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

நேபாளைச் சேர்ந்த சுமார் 29 மில்லியன் பேர் வளைகுடா நாடுகள், மலேசியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் மூலம் நேபாளத்துக்கு வரும் பணம் வழியே அந்நாட்டு அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கிறது. நேபாளத்தின் மொத்த உள்நாட்டு வருவாயில் 25 சதவீதம் இதன் வழியாக கிடைக்கிறது.

நேபாள போலீஸாரின் புள்ளி விபரங்களின்படி, மனித கடத்தல் தற்போது அதிகரித்துள்ளது. 181 ஆக இருந்த கடத்தல் புகார்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் 268 ஆக உயர்ந்துவிட்டது. இதில் 80 சதவிகிதம் இளம் பெண்கள்.

இந்த நிலையில் டெல்லி பெண்கள் ஆணையம் (டிசிடபிள்யூ) புஹர்கஞ்சில் உள்ள ஒரு ஒட்டலில் இருந்து நேற்று 39 பெண்களை மீட்டு உள்ளது. இந்த ஓட்டலில் சில நேபாள பெண்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து டெல்லி பெண்கள் ஆணையம் டெல்லி போலீசாருடன் சேர்ந்து ஒட்டலில் சோதனை நடத்தினர்.

இது குறித்து ஓட்டல் ஊழியர் ஒருவர் கூரியதாவது:-

இந்த பெண்கள் கட்ந்த 15 நாட்களாக இங்கு தங்கி உள்ளனர். அவரகள் அனைவரும் நேபாள அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் வைத்து உள்ளனர். அவர்கள் அடிக்கடி வெளியே சென்று மீண்டும் ஓட்டலுக்கு திரும்பி கொண்டு இருந்தனர் என கூறினார்.

டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்கள் விபச்சாரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பெண்கள் கமிஷன் குழு தெரிவித்துள்ளது.

மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் கூறியதாவது;-

"கடந்த வாரம் 73 பெண்கள் மீடக்கப்பட்டனர். ஐந்து நாட்களுக்கு முன்பு, சில பெண்களை டெல்லி மொனிர்கா பகுதியில் நாங்கள் காப்பாற்றியுள்ளோம். என கூறி உள்ளார்.

இந்த பெண்கள் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்தனர். டெல்லியில் பெரிய மனித கடத்தல் மோசடி நடக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என மலிவால் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com