நாடு முழுவதும் 391 பேருக்கு கொரோனா - 4 பேர் பலி

தமிழகத்தில் மட்டும் இன்று 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, பின்னர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 391பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் மராட்டியம், மத்திய பிரதேசம், கேரளா, தமிழகம் என நான்கு பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 27 பேர் குணமடைந்துள்ளனர்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com