குடிசையில் தாயுடன் உறங்கி கொண்டிருந்த சிறுவனை, சிறுத்தை ஒன்று கடித்து கொன்றது

குஜராத் மாநிலத்தில் குடிசையில் உறங்கி கொண்டிருந்த 3 வயது சிறுவனை, சிறுத்தை ஒன்று கடித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குடிசையில் தாயுடன் உறங்கி கொண்டிருந்த சிறுவனை, சிறுத்தை ஒன்று கடித்து கொன்றது
Published on

குஜராத் மாநிலத்தில் ஆடு மேய்க்கும் குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் திறந்தவெளி கொண்ட குடிசை ஒன்றில் உறங்கி கொண்டிருந்துள்ளான். அப்போது காட்டுப்பகுதியில் இருந்து திடீரென அங்கு வந்த சிறுத்தை, உறங்கிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை அப்படியே கவ்வியுள்ளது.

கால்நடைகள் கத்தும் சத்தம் கேட்டு விழித்த பெற்றோர், என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்குள் சிறுத்தை அந்த சிறுவனை இழுத்துக் கொண்டு காட்டிற்குள் ஓடியுள்ளது. இதனையடுத்து மறுநாள் காலையில் வனத்துறையினருடன் சேர்ந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

அப்போது சிறுவனின் பாதி உடல் மட்டும் புதருக்குள் கிடப்பதை பார்த்து பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.இதனையடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com